இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலர் எஸ்.ஜே அபுல் ஹசன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக அதிராம்பட்டினம் அல் மதரஸத்தூர் ரஹ்மானிய அரபிக்கல்லூரி பேராசிரியர் ஏ.ஜே முஹம்மது நெய்னா ஆலிம் கலந்துகொண்டு இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார். பின்னர் சிறப்பு துஆ ஓதினார். இந்நிகழ்ச்சியில், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ, பட்டுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் கோவிந்தராசு, எம்.கே.என் மதரஸா டிரஸ்ட் தலைவர் என். அகமது அன்சாரி, கல்லூரி முன்னாள் செயலர் அஸ்லம், எம்.கே.என் மதரஸா டிரஸ்ட் உறுப்பினர்கள், கல்லூரி முதல்வர் ஏ.எம் உதுமான் முகையதீன், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள், கல்லூரி அலுவலக ஆய்வக ப்பணியாளர்கள், ஊர் பிரமுகர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட 450 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.